நரை முடி இருக்கின்றது என கவலையா? இதோ அதற்கான டிப்ஸ்!
நரை முடிகள் மொத்தமாக வேரிலிருந்து சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.
பிரியாணிக்கு பயன்படுத்தக்கூடிய இலை. இதில் நம் உடலில் உள்ள சத்துக்களை அதிகரித்து தலைமுடி நரைத்து போதலை தடுக்கிறது.
முடியின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்த பொருளாகும் இதில் அதிகப்படியான மினரல்ஸ்கள் அடங்கியுள்ளது. பாலிக்குனாய்ஸ் அதிகமாக உள்ளது. இவை ஆன்டிபாக்டீரியாளாக பயன்படுகிறது. இதன் விளைவாக முடியில் உள்ள வேர்களில் பொடுகு மற்றும் சரும பிரச்சனைகள் ஆகியவற்றை போக்குவதற்கு உதவுகிறது.
முடி உதிர்வதை தடுப்பதற்கு பூண்டில் அதிகப்படியான அலிசின் என்கின்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை புது முடிகள் வளர்வதற்கும் மற்றும் முடி கொட்டாத வண்ணம் பாதுகாத்துக் கொள்கிறது. முடி அடர்த்தியாகவும் உதவுகிறது. முடி கருமை ஆவதற்கும் உதவுகிறது.
செய்முறை:
மூன்று பிரியாணி இலைகள், நான்கு பூண்டு, ஒரு ஸ்பூன் டீ தூள் ஆகியவற்றை 500மிலி தண்ணீரில் அரை மணி நேரம் நன்றாக கொதிக்க விட்டு அதனை வடிகட்டி காலையில் குளிப்பதற்கு முன் இதனை தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலமாக நரைமுடி முடி கொட்டுதல், பொடுகு பிரச்சனை ஆகிய அனைத்தும் நீங்கி அடர்த்தியான முடி வளரச் செய்யும். கருமையான முடி வளர உதவுகிறது.