ஆஞ்சநேயரை வழிபடுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீர்ந்துவிடும்..!!

Photo of author

By Janani

ஆஞ்சநேயரை வழிபடுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீர்ந்துவிடும்..!!

Janani

கலியுக்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். ‘சர்வமங்கள கார்யானு கூலம் ‘ என்று ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலனைக் குறிப்பிடுவார்கள்.அதாவது தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள எல்லா ஆற்றலையும் கொடுத்து மனதில் வலிமையை ஏற்படுத்துவார் என்பது ஆஞ்சநேய வழிபாட்டின் ஐதீகமாகும். அவர் வாயுவின் புத்திரர் என்பதால் அவர் காற்றோடு காற்றாக கலந்து, எங்கும் நிறைந்து நம்மை காப்பதாக நம்புகிறார்கள்.

பலவித தோற்றங்களில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர், தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று வகைகளிலும் வரப்பிரசாதமாக இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.சேவை செய்வதற்காகவே அவதாரம் எடுத்தவர் ஆஞ்சநேயர். மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த போது, அவருக்கு சேவை செய்வதையே தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு ஆஞ்சநேயர் வாழ்ந்தார்.

இதனால் ராமபிரானுக்கு எங்கெங்கு ஆலயம் உள்ளதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைப்பட்டுள்ளது இவை தவிர ஆஞ்சநேயருக்கு என்றே தனியாக ஆலயங்களும் உண்டு.ராம நாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு நிச்சயம் ஆஞ்சநேயர் இருப்பார்.

தீவிர ராம பக்தரான ஆஞ்சநேயர், ராமரின் வாயாலேயே சிரஞ்சீவி வரம் பெற்றவர். பக்தி, வீரம், பேச்சுதிறன், சேவை ஆகியவற்றிற்கு உதாரணமாக சொல்லப்படுபவர் வீர ஆஞ்சநேயர். அவரை வழிபடுபவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அனுமனை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் அனைதஅது காரியங்களும் வெற்றி அடையும். அனுமனை வழிபடுபவர்கள் ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன், இறுதி காலத்தில் ராமரின் அருளால் முக்தி அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அனுமனை வழிபடுவதால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

அனுமனை வழிபட்டால் மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம். ஆஞ்சநேயரை வழிபட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடைவதுடன், குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீரும், நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கிரக தோஷங்கள் விலகும்.

ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால் அவரை வழிபட அனைத்து நாட்களும் ஏற்ற தினங்களாகும். இருந்தாலும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

இந்த கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை, துளசி மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஆஞ்சநேயர் சிறப்பான பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார்.

“ஓம் ஜம் ஹரீம்
ஹனுமதே
ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய;
அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய,
ஸாகினீடாகினீ வித்வப்ஸனாய,
கிலகிய பூ பூ காரினே
விபீஷணாய,
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹரீம்
ஸ்ரீம் ஹராம்
ஹீரீம் ஹரும் பட் ஸ்வாஹா”

உண்மையான பக்தியுடன் இந்த மந்திரத்தை தினமும் கூறி வர வேண்டும். இந்த மந்திரத்தை கூறி நமது வேண்டுதல் அல்லது பிரார்த்தனையை முன் வைக்கும் போது நாம் எதிர்பார்த்த முடிவை அடைய முடியும்.

முருகனுக்கு எப்படி வேல் வழிபாடு சிறந்ததோ, அதே போல் அனுமனுக்க வால் வழிபாடு சிறந்ததாகும். ஆஞ்சநேயரின் வாலில் போட்டு வைத்தும், வெண்ணெய் சாற்றியும் வழிபட்டால், வெண்ணெய் உருகுவதை போல் நம்முடைய கஷ்டங்களும் வெண்ணெய் போல் உருகி ஓடி விடும் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது சிறந்த வழிபாடாகும். வட இந்தியாவில் இவருக்கு ஜாங்கிரி மாலை சாற்றும் வழக்கம் உள்ளது.

அனுமனின் வாலில் தான் சக்தி அதிகம். அதனால் வால் துவங்கும் இடத்தில், வாலின் நுனி பகுதி வரை சந்தனம் குங்குமம் பூசி வழிபட வேண்டும். அனுமன் காயத்ரி சொல்வதால் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் விலகும். ஸ்ரீராம ஜெயம் எழுதியும் மாலை கட்டி அனுமனுக்கு அனுவிக்கலாம். இதனால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.