அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர கல் உப்பு மற்றும்  5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்யுங்கள்!! அப்புறம் நடப்பதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

Photo of author

By Divya

அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர கல் உப்பு மற்றும்  5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்யுங்கள்!! அப்புறம் நடப்பதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

உப்பு நம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருக்கிறது.இந்த உப்பு சமையலுக்கு மட்டும் அல்ல ஆன்மீகத்திற்கு சிறந்த ஒரு பொருளாக விளங்குகிறது.இந்த கல் உப்பில்
மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார் என்று நம்பப்படுகிறது.

உப்பு எதிர்மறை எண்ணங்களை உள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவையாக இருப்பதினால் வீட்டு சமையலறையில் உப்பு எப்பொழுதும் நிரம்பி இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை தனக்குள் ஈர்த்துக் கொண்டு நல்ல வினைகளை கொடுக்கும் ஆற்றல் கல் உப்பிற்கு உண்டு.

நம்மில் பலருக்கு பணம்,நகை சேமிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவை நடக்காமல் இருக்கிறது.சேமித்த பணம் மற்றும் நகை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது.இதற்கு காரணம் வீட்டின் மீது லட்சுமி தாயாரின் பார்வை இல்லை என்று அர்த்தம்.எந்த ஒரு இல்லத்தில் மகா லட்சுமி தாயார் குடி இருக்கிறாரோ அங்கு தான் செல்வம் நிரம்பி கொண்டே இருக்கும்.அதே சமயம் தேவை இல்லாத செலவுகளும் ஏற்படாமல் இருக்கும்.

இதற்கு எளிய தீர்வு கல் உப்பு பரிகாரம் தான்.வீட்டு சமையலறையில் உள்ள உப்பு ஜாடியில் முழுவதுமாக உப்பு சேர்த்து நிரபிக் கொள்ளவும்.பின்னர் அதில் 5 ரூபாய் நாணயத்தை போட்டுக் கொள்ளவும்.பின்னர் வீட்டில் செல்வம் செழிக்க வேண்டுமென்று மகா லட்சுமி தாயாரை மனதில் நினைத்து கொண்டு உப்பு ஜாடியை வழிபாட வேண்டும்.இந்த வழிபாட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை அதிகாலையில் குளித்து விட்டு செய்யவும்.

இவ்வாறு செவ்வாய்,வெள்ளி என்று ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி செல்வம் பெருகத் தொடங்கும்.அதேபோல் நாம்\உபயோகிக்கும் உப்பு ஜாடி கண்ணாடியால் ஆன ஒன்றாக இருந்தால் மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கும்.

மேலும் வீட்டில் உப்பு,அரசி,பருப்பு உள்ளிட்ட பொருட்கள் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.