10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?

Photo of author

By Divya

10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?

Divya

இந்த நவீன காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயமாக இருக்கிறது.அளவாக சாப்பிட்டாலும் சோம்பல் வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரித்துவிடுகிறது என்று பலரும் புலம்புகின்றனர்.

அதிக கலோரி நிறைந்த உணவுகள் சாப்பிடுதல்,சசரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காமல் இருத்தல்,ஊட்டச்சத்து குறைபாட்டை சந்தித்தல் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.உரிய உடற்பயிற்சி இல்லாமை,உடல் நோய்கள் காரணமாக எடை அதிகரிக்கிறது.

தூக்கமின்மை,உடல் சோர்வு போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கரித்துவிடும்.அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.வெளியில் அதிக துரித உணவுகளை உட்கொண்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.

உடல் எடை எந்த வயதினருக்கும் வரக் கூடிய பிரச்சனைதான்.இந்த காலத்தில் உடல் எடை அதிகரிப்பு வேகமாக அதிகரித்து வரும் பிரச்சனையாக இருப்பதால் அதை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.தினமும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

உடலில் கெட்ட கொழுப்புகள் குவிந்தால் பல நோய்கள் உருவாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த காலத்தில் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை இருக்கிறது என்றாலும் அதை எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.

நமது உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய நாம் தினமும் 10 நிமிடம் மாடிப்படி ஏறி இறங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.நாம் மாடிபடி ஏறுவதால் கால் தொடைகளில் உள்ள கொழுப்புகள் தானாக குறையும்.

இதுவும் ஒருவித உடற்பயிற்சிதான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் கொழுப்பு குறைந்துவிடும்.