உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படி செய்வீர்களா? கடும் கோபத்திற்கு ஆளான நகுலின் மனைவி!

Photo of author

By Kowsalya

நகுலின் மனைவியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர் நெட்டிசன்கள். எதற்காக என்றால் இன்ஸ்டாகிராமில் இப்பொழுது சமூக வலைதளங்களில் எதற்கெடுத்தாலும் ஆர்மீ பேன் பேஜ் என்று ஆரம்பித்து கொள்கிறார்கள். இந்த கலாச்சாரம் இப்போது அதிகமாக காணப்படும் வருகிறது. அந்த வகையில் தான் பிறந்த குழந்தைக்குப் பேன் பேஜ் ஆரம்பித்தால் நன்றாக மாட்டிக் கொண்டுள்ளனர்.

நடிகர் நகுல் அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது. அந்த குழந்தைக்கு அகீரா என்றும் பெயர் வைத்துள்ளனர்.கணவன் மனைவி இருவருமே தங்கள் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? என்று சமூக ஊடகங்களில் அவர்களது கருத்துகளை இன்ஸ்டாகிராம் பதிவிட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் என்ன என்பதை அறிவிக்கும் வகையில் போட்டோ ஷூட் ஒன்று கூட சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் குழந்தையின் அழகிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல அந்த சிறு குழந்தைக்கும் பேன் பேஜ் ஒன்றை ஆரம்பித்து விட்டுள்ளனர்.

இந்த பேன் பேஜ் விஷயம் நகுல் மற்றும் நகுலின் மனைவிக்கு தெரியவர ஏற்கனவே லைவ் ஒன்றில் வெளிவந்த பொழுது கடுமையாகப் பேசி அந்த குழந்தைக்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த பக்கத்தை நீக்குமாறு நகுல் மற்றும் அவரது மனைவியும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நெட்டிசன்கள் அதை நீக்கவில்லை. இதனை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நகுலின் மனைவி அகீரா குழந்தை பேன் பேஜ் குறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அதில் பிளாக் என்ற வார்த்தையை குறிப்பிட்டு சொல்லி இருந்தார். மேலும் உங்களுடைய அன்பை எங்களுக்குப் புரிகிறது. ஆனால் “நாங்கள் இதை பொறுமையாக சொல்கிறோம் கேட்டுக் கொள்ளுங்கள் அது மட்டுமில்லாமல் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள் மைனராக இருக்கும் குழந்தைக்கு இந்த மாதிரி உருவாக்குவது எல்லாம் தவறு” உங்களுடைய சொந்த குழந்தையாக இல்லாத பொழுது மற்றவர் குழந்தைகளுக்கு ஏன் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்று மிகவும் கோபத்துடன் கூறியுள்ளார். இதேபோல் மற்ற ஏதாவது பக்கங்கள் இருந்தாலும் தெரிவிக்கும் படியும் குறிப்பிட்டுள்ளார். .