வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!..

0
238

வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!..

முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள் , பாஸ்மதி அரிசி – ஒரு கப், பீட்ரூட் – 2, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா இரண்டு, சோம்பு – அரை தேக்கரண்டி, பிரியாணி இலை – ஒன்று, பிரியாணி மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி, சாம்பார் தூள் மற்றும் மிளகாய், தனியா தூள் – ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் – ஒன்று, புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி, தயிர் – 2 மேசைக்கரண்டி, நெய்யில் வறுத்த முந்திரி – 10, எண்ணெய் + வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கு

 

வாங்க எப்படி செய்வதென்று பார்க்க பார்க்கலாம்,செய்முறை .. வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.அரிசியை களைந்து ஊற வைக்கவும்.தக்காளியுடன் கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி, தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.பின் தயிர் சேர்த்து பிரட்டவும்.ஒன்றரை கப் நீர் விட்டு கொதித்ததும், அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு சிறுந்தீயில் மூடி வேக விடவும்.முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.சுவையான பீட்ரூட் பிரியாணி தயார்.

Previous articleவிநாயகரை நீரில் கரைப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?
Next articleசிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here