Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் !

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் !

அபியங்கா என்பது ஆயுர்வேத மசாஜ் பயிற்சி மற்றும் தினசரி சடங்காகும். இதனை சிநேகனா என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் அமைப்பு, அழகு, செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது.வாத கோளாறு, தாகமாக இருக்கும் போது, உலர்ந்த தோல் முடி மற்றும் நகங்கள் வறட்சி, உடல் பலவீனமான உணர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் அல்லது சமநிலையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படும்போது இந்த ஆயுர்வேதத்தை பரிந்துரைக்க வேண்டும்.அபியங்கா எண்ணெய் மசாஜ் ஆனது, குளிர்ந்த எண்ணெயை விட வெதுவெதுப்பான எண்ணெய் மிகவும் சிறப்பானது. இதனால் ஆயுர்வேதத்தில் பெரிதும் விரும்புகிறார்கள்.

பாதங்களில் வறட்சி மற்றும் விரிசல் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.கண் பார்வை தெளிவை கிடைக்கிறது.கால்களின் சோர்வு மற்றும் உணர்வின்மை நீங்குகிறது.சிறந்த சமநிலையை உடலுக்கு வழங்குவதால் வலிமையும் உறுதியும் அளிக்கிறது. தசை மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நரை மற்றும் முடி உதிர்வதை தடுக்கிறது. அதுமட்டுமின்றி முடியை அடர்த்தியாகவும், மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது.

இது பார்வை, செவித்திறன் மற்றும் தோல் உணர்வுகளை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைந்து உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மற்றும் கவர்ச்சியாகவும் வைத்திருக்கிறது.

Leave a Comment