ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!..

0
166

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!..

முதலில் இவற்றை தயார் செய்ய,தேவையான பொருள்கள்  ஜீரா ரைஸ் – 150 கிராம், வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி – சிறிதளவு, பூண்டு – 10 பல், காளான் – 150 கிராம், சோயா சன்ங்ஷ்- 50 கிராம், கொத்தமல்லி – கால் கட்டு, புதினா – கால் கட்டு, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, நெய் – சிறிதளவு வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்…

செய்முறை;இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். சோயா சன்ங்ஸை கொதிக்கும் நீரில் போட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை 4 ஆக அறிந்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அறிந்து கொள்ளவும். சிறிது கொத்தமல்லி, புதினாவை தாளிக்க எடுத்து வைத்து கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.அதில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, மஷ்ரூம், சோயா சன்ங்ஸை போட்டு நன்கு வதக்கவும்.அதனுடன் அரைத்த விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.பிறகு அரிசிக்கு தகுந்தவாறு தண்ணீர் ஊற்றவும்.அரிசியை முன்பே அரைமணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடவும்.சிம்மில் வைத்து நன்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும். சுவையான மஷ்ரூம் சோயா பிரியாணி தயார்.

 

 

Previous articleKanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? 
Next articleகத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்!