பாதி எரிந்த நிலையில் கூலித்தொழிலாளி உடல் கண்டெடுப்பு! தப்பி ஒடியவர்கள் குறித்து போலீஸ் விசாரணை!

Photo of author

By Parthipan K

நாகையில் கூலித்தொழிலாளியை வெட்டி கொன்று தீ வைத்து  எரித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வலைவீசி வருகின்றனர்.

நாகை மாவட்டம் பெருந்துறை பகுதியில் வசித்து வந்தவர் தமிழ்வாணன். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் உறவினர்கள் இருக்கும் தெருவில் வசித்து வருகிறார். தமிழ்வாணன் சில தினங்களுக்கு முன் காணாமல் போய் விட்டதால், அவரது உறவினர்கள் பல பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள குளக்கரை ஓரம் வெட்டுக் காயங்களுடன் கருகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைக் கண்டதும், அவருடைய உறவினர்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தமிழ்வானனை கொன்றதுயார்? காரணம் என்ன ? என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.