Cricket: இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் முழுவதும் கேப்டன் பொறுப்பை துணை கேப்டனிடம் கொடுங்கள் ஆகாஷ் சோப்ரா.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அவருக்கு தொடர் முழுவதும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு கவாஸ்கர் கூறியிருந்தார் தற்போது அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இந்திய அணி நியூசிலாந்து உடன் ஒயிட் வாஷ் தோல்வி சந்தித்து கவலையில் ஆழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அடுத்து நடக்க இருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 22 தொடங்கவுள்ள இந்த தொடருக்கு நவம்பர் 10ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியானது அதற்கு கருத்து தெரிவித்த கவாஸ்கர் கேப்டன் பதவியை மாற்ற வலியுறித்தினர். இதற்கு ஆதரவு தெரிதிருகிறார் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறுகையில் ஒரு தொடரின் முதல் போட்டியில் கேப்டன் விளையாடுவது முக்கியம் வாய்ந்தது.இவ்வாறு அவர் சொந்த காரணங்களால் விளையாட முடியவில்லை என்றால் அவர் அந்த தொடர் முழுவதும் கேப்டனாக இருக்க கூடாது.
2வது போட்டியில் அவர் கலந்து கொண்டாலும் அவர் ஒரு வீரராக மட்டும் கலந்து கொள்ள வேண்டும் கேப்டன் பதவியை துணை கேப்டனிடன் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். விராட் கோலி ஒரு தொடரின் முதல் போட்டியில் கலந்து கொள்ள வில்லை ஆனால் அவர் கேப்டன் பதவியை ரஹானேவிடம் கொடுத்தார் அதனால் அந்த போட்டியில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.