நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

0
162
Writ petition filed against NEET exam! Hearing in the Supreme Court today!
Writ petition filed against NEET exam! Hearing in the Supreme Court today!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.அந்தவகையில் நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடத்தப்பட்டது.அதனுடைய முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அந்த மனுவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.இந்த ரிட் மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன் விசாரித்தது.அப்போது அந்த மனுவில் தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை குறித்து விசாரணை மேற்கொள்ளாலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டனர்.

இதன் மூலம் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று  நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.

Previous articleஇந்துக்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு ராசாவின் மீது வழக்குப் பதிய தயங்கும் காவல்துறையினர்! ரவுண்டு கட்ட காத்திருக்கும் நீதிமன்றம்?
Next articleதுணிவு vs வாரிசு… கலைகட்டிய சோஷியல் மீடியா… இதுவரை ஒன்றாக வெளியான அஜித் விஜய் படங்கள்!