எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

0
258
#image_title

 

 

எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் எக்ஸ்பிபி என்ற இந்த வைரஸ் தான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது, இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதன் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மருத்துவ துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையான வைரஸ் கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தாலும் அதன் பாதிப்பு என்பது மிகவும் குறைவு தான் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தின் தலைவர் சௌமித்ரா தாஸ் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் இந்த வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி செய்யும் முழுமையான தகவல்கள் தங்களிடம் இல்லை என்று கூறிய அவர்.

கடந்த இரண்டு வருடமாக இந்திய மக்களுக்கு போடப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஊசிகளால் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனர்.

ஆனால் இந்த எக்ஸ் பிபி வைரஸின் தாக்கத்தை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது எனவும், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியில் புதிய வைரஸ் மாறுபட்டு தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

தென் இந்திய மாநிலங்களான தெலுங்கானா , ஆந்திரா , தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள சுகாதார துறை மூலம் இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து,தொற்று பாதித்த நபர்கள்  தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்குமாறும், மேலும் தடுப்பூசி மற்றும் அதற்கான மருந்துகளையும் தயார் படுத்தி வைத்துகொண்டு, கொரோனா தடுப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Previous articleசிம்புவின் 48வது திரைப்படம்! மூன்று ஹீரோயினியா வெளிவந்த நியூ அப்டேட்?
Next article2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!!