சிறுநீர் பாதை புண்ணை குணமாக்கும் மஞ்சள் நிறப் பூக்கள்!! என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Gayathri

உங்களில் சிலர் சிறுநீர் கழிக்கும் பொழுது மிகுந்த வலி மற்றும் எரிச்சலை சந்திப்பீர்கள்.சிறுநீரகப் பாதையில் பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்று இருந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே இதை வீட்டு வைத்தியம் செய்து முழுமையாக குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

1.ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி
2.தேன் – அரை தேக்கரண்டி
3.தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:

மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் ஆவாரம் பூ சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகளை குணமாக்க உதவும்.

இந்த ஆவாரம் பூ இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிளாஸ் அளவு நீரை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும்.அதன் பிறகு அரைத்த ஆவாரம் பூ சாறை அதில் சேர்த்து ஒரு நிமிடதிற்கு கொதிக்கவிடவும்.

பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி அரை தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் சிறுநீரகப் பாதையில் உள்ள புண்கள் ஆறிவிடும்.

தேவையான பொருட்கள்:

1.கீழாநெல்லி – இரண்டு தேக்கரண்டி
2.பால் – கால் கிளாஸ்

பயன்படுத்தும் முறை:

முதலில் கீழாநெல்லியை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து கால் கிளாஸ் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.அடுத்து கீழாநெல்லி சாறை அதில் கலந்து பருகினால் சிறுநீரகப் பாதையில் உள்ள புண் மற்றும் கிருமி தொற்று நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

1.ரணகள்ளி பொடி – 10 கிராம்
2.தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:

ரணகள்ளி இலையை நன்கு காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

பிறகு அதில் 10 கிராம் அளவிற்கு ரணகள்ளி பொடி சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் சிறுநீரகப் பாதையில் உள்ள புண்கள் ஆறும்.