மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே… மஞ்சள் நிற பொருட்களுக்கு இவ்வளவு மகிமையா…

0
222

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே… மஞ்சள் நிற பொருட்களுக்கு இவ்வளவு மகிமையா…

மாம்பழம், மக்கா சோளம், வாழைப்பழம் போன்ற மஞ்சள் நிறத்தில் உள்ள பொருள்களின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பழ நன்மைகள் கிடைக்கின்றது. மஞ்சள் நிறத்தில் உள்ள சில பழங்கள் மற்றும் காய்கறிகள் பின்வருமாறு..

* வாழைப்பழம்
* மாம்பழம்
* சோளம்
* மஞ்சள் குடைமிளகாய்
* அன்னாசி பழம்

வாழைப்பழத்தின் நன்மைகள்…

வாழைப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் எ, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஒரு முழுமையான வாழைப் பழத்தில் 450 மி.கி பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. இதனால் நமக்கு இதய நோய்கள் ஏற்படாது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

மாம்பழத்தின் நன்மைகள்…

மாம்பழத்தில் வைட்டமின் எ சத்து அதிக அளவில் உள்ளது. இதனால் முகம் பொலிவாக இருக்கும். மேலும் முகப் பொலிவு அதிகரிக்கும். மேலும் மாம்பழத்தில் பாலிபினால்ஸ் என்ற மூலக்கூறு உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும்.

சோளத்தின் நன்மைகள்…

சோளத்தை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது அரிப்பு, சொரி போன்றவற்றை குணமாக்கும். மேலும் சோளத்தை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது சருமம் பாதுகாக்கப்படுகின்றது.

மஞ்சள் குடை மிளகாய்…

குடை மிளகாய் பல வண்ணங்களில் உள்ளது. ஆனால் மஞ்சள் நிறத்தில் உள்ள குடை மிளகாயில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. குறிப்பாக உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து போன்றவை அதிகளவில் இருக்கின்றது.

அன்னாசி பழத்தின் நன்மைகள்…

அன்னாசி பழத்தை நாம் தினமும் எடுத்துக் கொண்டால் நம் எலும்புகளுக்கு பலம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும், கண் பார்வை குறைபாடு உள்ளவர்களும் அன்னாசி பழத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Previous articleகுதிகாலில் அதிக வெடிப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில எளிய மருத்துவ குறிப்புகள் இதோ..
Next articleஅயர்லாந்துக்கு எதிரான முதல் டி20… 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!