“மஞ்சள்” கட்டாயம் இவர்கள் அறவே தவிர்க்க வேண்டும்!! உணவில் மறந்தும் சேர்த்து விடாதீர்கள்!!

Photo of author

By Divya

இந்திய உணவுகளில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது.உணவின் சுவை மற்றும் நிறத்தை அதிகரிக்க பயன்படுத்தும் மஞ்சள் ஒரு மருந்துப் பொருளாகும்.மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

இரத்தத்தில் படிந்த அழுக்குகள் நீங்க,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் சிறந்த தீர்வாக இருக்கின்றது.மஞ்சளில் இருக்கின்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.

மஞ்சளில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

1)வைட்டமின்கள்
2)தாதுக்கள்
3)மாங்கனீசு
4)இரும்பு
5)நார்ச்சத்துக்கள்
6)தாமிரம்
7)பொட்டாசியம்

சளி,இருமல்,தொண்டை வலி,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.மஞ்சளில் நிறைந்திருக்கும் குர்குமின் மூட்டு வலியை போக்க உதவுகிறது.

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி பொருளாகும்.இதை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த மஞ்சளை நாளொன்றுக்கு 2000 மில்லி கிராம் வரை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி மஞ்சளை உட்கொண்டால் அது உடலில் நச்சுத் தன்மையாக மாறிவிடும்.

பித்தப்பை பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சளை தவிர்க்க வேண்டும்.நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை தவிர்க்க வேண்டும்.உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் உணவில் மஞ்சள் சேர்க்கக் கூடாது.

கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளக் கூடாது.இரைப்பை தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் மஞ்சளை தவிர்க்க வேண்டும்.