நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

Photo of author

By Vijay

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

Vijay

Yesterday's complaint was resolved today!! The lotus blossomed in Kongu region!

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

கோவை மாவட்டத்தில் நகரத்தின் முக்கியமான வணிகப் பகுதிகளில் காந்திபுரமும் உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரை கண்ட மாநகராட்சி ஆணையர் பிரபா உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதவி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள் சுகாதாரப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

ஆக்கிரமிப்பு பணியில் கடைகள் மற்றும் வணிக தளங்கள் ரோடுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் விளம்பரப் பலகைகள் போன்ற அனைத்தையும் அகற்றி பாதையை சீரமைத்தனர். இந்த செயலை பார்த்த பொதுமக்கள் மாநகராட்சி ஊழியர்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் ஒரு குறையை வைத்துள்ளனர் கடைகளுக்கு செல்பவர்கள் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நிறுத்தி விட்டு செல்வதாக புகார்களை தெரிவித்தனர். அதற்கு காவல்துறை அதிகாரிகள் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.