நேற்று ரசம் இன்று சாம்பார்! உணவு சாப்பிட்ட 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
நேற்று திருப்பூர் தனியார் காப்பகத்தில் ரச சாதம் சாப்பிட்டார் 20 குழந்தைகளின் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனையடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்லி விழுந்த உணவு சாப்பிட்டு 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நத்தாநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். அந்த பகுதியை சுற்றியுள்ள பெண்கள் தான் இந்த தொழிற்சாலைக்கு வந்த வேலை செய்கின்றனர்.
இரவு மற்றும் காலை என்ற இரண்டு ஷிப்டுகளின் இந்த தொழிற்சாலையில் வேலை நடைபெறும். நேற்று இரவு வேலைக்கு வந்த பெண்கள் கேண்டினில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட பெண்களுக்கு உடனடியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவரின் சிகிச்சைக்கு பின்பு தான், அவர்கள் உண்ட உணவில் பல்லி இருப்பது தெரிய வந்தது. மேற்கொண்டு அந்த உணவை சாப்பிட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.