தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமையாலும், நகைச்சுவைப் பேச்சாளும் பல மக்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞரான “யோகி பாபு”. ஆரம்பத்தில் இவருடைய உருவத்தைப் பல பேர் கலாய்த்தாலும், தன்னுடைய உருவத்தை ஒரு அடையாளமாக மாற்றிக் கொண்டு மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். இவர் கடைசியாக நடித்த “போட்” திரைப்படம் வெளியாகி நல்ல கமெண்ட்ஸ்களைப் பெற்றுள்ளது. மேலும் இவர் மண்ணாங்கட்டி, ஜோரா கைய தட்டுங்க மற்றும் வானவன் ஆகிய பல திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு “ட்ராப் சிட்டி” என்ற திரைப்படத்தின் மூலமாக முதல்முறையாக ஹாலிவுட் படத்தில் களம் இறங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தைப் பிரபல இயக்குனரான திருச்சியைச் சேர்ந்த டெல் கே.கணேசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிராண்டன் டி.ஜாக்சன், ஜே.ஜென்கின்ஸ், நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகின்றது.
இந்தப் படத்தில் யோகி பாபு ஒரு ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல் நடமாடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ரிலீசான “சட்னி சாம்பார்” என்ற ஒரு வெப் சீரிஸில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.