மார்கெட் ரேஞ்சுக்கு ஏத்த மாறி சம்பளம் வாங்கும் யோகிபாபு!! சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா??

மார்கெட் ரேஞ்சுக்கு ஏத்த மாறி சம்பளம் வாங்கும் யோகிபாபு!! சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா??

இப்பொழுது நகைசுவை நடிகாரக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்தான் யோகி பாபு.தனது நகைச்சுவை நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளார்.

தற்பொழுது ஒரு படத்திற்காக யோகி பாபுவை தேர்ந்தெடுத்த பின்னர்தான்  கதாநாயகன்,கதாநாயகியை தேர்தேடுகின்றனர் இயக்குனர்கள்.

ஆரம்பத்தில்  சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இப்பொழுது இவர் இல்லாத தமிழ் சினிமா படங்களே இல்லை என்ற அளவிக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்த யோகி பாபு தற்பொழுது கதாநாயகனாக மாறி உள்ளார். அவர் ஹீரோவாக நடித்த மண்டேலா என்னும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் தற்பொழுது வெளியான மாவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அந்த படத்தின் வெற்றிக்கு இவர் ஒரு ப்ளஸ் பாய்ண்டாக உள்ளார். மேலும் நெல்சன் இயக்கதில் ரஜினிகாந்த் அவர்கள் ஹீரோவாக நடிக்கும் ஜெயிலர் படத்தில் யோகிபாபு நகைச்சவை நடிகராக நடித்து வருகிறார்.

இப்படி ஒருபுறம் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும் இன்னொரு புறம் ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்துள்ளார்.

அதனை தடுத்து தற்பொழுது அவர் நடிப்பில் தயாராகி கொண்டு உள்ள அயலான் ,கங்குவா ,அரண்மனை ௪ ,சதுரங்க வேட்டை ,அந்தகன் ,எல்ஜிஎம் ,மருத்துவ அதிசயம் ,பூமர் அங்கிள் ,போன்ற பல படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் இவரது காமெடிக்காவது ஓடிவிடும் என்பதால் பல இயக்குனர்கள் இவரது காள் சீட்டுக்காக காத்திருக்கின்றனர்.இப்படி தொடர்ந்து நடித்து கொண்டு இருக்கும் யோகிபாபுவின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது.

தொடக்க காலத்தில் வெறும் 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க வந்த யோகிபாபு தற்பொழுது 3 கோடி சம்பளம் வாங்கி வருகின்றார்.

அந்த வகையில் இவரது சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 400 கோடியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.இவை அனைத்தும் யோகிபாபுவின் திறமைக்கு கிடைத்த கூலி என்று சொல்லலாம்.தனது திறமையின் மூலம் இவர் இதற்கு மேலையும் சொத்து சேர்க்க முடியும் என்று யோகிபாபுவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.