நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம்!! மகளிர் உரிமைத்தொகை குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!!
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். அதில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்திருந்தார்.
தமிக அரசு கடந்த மாதம் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. மேலும் அந்த உரிமை தொகையை அனைவருக்கும் வழங்காமல் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த 1000 ரூபாயை கலைஞர் பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் அதற்கு விண்ணபிக்க சிறப்பு முகாம் அந்தந்த பகுதிகளில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அதற்கு ஒரு புதிய செயலியை அறிமுகபடுத்தியது. ஆனால் அந்த செயலி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கிடையாது என்று அறிவித்திருந்தது. இது குறித்து தன்னார்வலர்களுக்கு மட்டும் பயற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்ய உள்ளார்கள். மேலும் டோக்கன் விநோயகம் செய்யும்போது, வீட்டில் ஆட்கள் இல்லை என்றால் அவரிகளின் விவரங்களை குறித்து வைக்க வேண்டும். மேலும் தமிழக அரசு ஒரு நாளைக்கு 60 % விண்ணபங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட முகாமை குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களில் குடும்பத் தலைவியின் விபரங்கள் அனைத்து ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் விண்ணப்பம் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து செய்தி இல்லத்தரசியின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு தகுதி உடையவர்கள் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளர்கள். ஆனால் நன்கு சக்கர வாகனங்கள் இருக்கும் வீட்டு குடும்ப தலைவிகள் மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளர்கள். மேலும் மேல்முறையீடு செய்தால் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.