குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமையாகும்.பிறந்த குழந்தைகளால் தாங்கள் படும் அவதியை விவரிக்க முடியாது.அவர்கள் அழுகை மற்றும் சில மாற்றங்களை வைத்து மட்டுமே நம்மால் கண்டறிய இயலும்.
குழந்தைகளின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து உடல் நலக் கோளாறுகளை கவனமுடன் கண்டறிய வேண்டும்.இதில் முக்கிய அறிகுறியாக இருப்பது மலம்.குழந்தைகள் வெளியேற்றும் மலத்தின் நிறத்தை வைத்து உடல் உபாதைகளை கண்டறிய இயலும்.
பிறந்த குழந்தைகளுக்கு பச்சை,கருப்பு,பழுப்பு,வெளிர் மஞ்சள்,வெள்ளை நிறங்களில் மலம் வெளியேறும்.குழந்தைகள் வெளியேற்றும் மலத்தின் நிற மாற பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
தாய்ப்பால்,வயது,மாறுபட்ட உணவு உள்ளிட்டவைகளால் மலத்தின் நிறம் மாறலாம்.பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தை கருப்பு நிற மலத்தை வெளியேற்றினால் பயன்பட வேண்டாம்.குழந்தையின் உடலில் இருக்கின்ற மெக்னீசிய கழிவுகள் வெளியேறுவதால் மலம் கருமை நிறத்தில் இருக்கிறது.
ஆனால் சில மாதங்கள் ஆன குழந்தை கருப்பு நிறத்தில் மலத்தை வெளியேற்றினால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.இரைப்பை குடல் இரத்தப்போக்கிற்கான அறிகுறிகளாக இவை இருக்கலாம்.
குழந்தையின் மலம் சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தால் அது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருப்பதை குறிக்கிறது.
உங்கள் குழந்தை வெளியேற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து கவலை பட தேவையில்லை.ஆனால் அடர் மஞ்சள் நிறத்தில் மலம் இருந்தால் அது தாய்ப்பால் அல்லாத பார்முலா பால் குடிப்பதால் ஏற்படக் கூடியதாகும்.
பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மலம் வெளியேறினால் அது வயிற்றுபோக்கிற்கான அறிகுறிகளாகும்.தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வெளிர் பழுப்பு அல்லது வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மலம் வெளியேறும்.ஆனால் பார்முலா பால் குடிக்கும் குழந்தையின் மலம் அடர் பழுப்பு அல்லது அடர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
குழந்தைகள் பச்சை நிறத்தில் மலம் வெளியேற்றினால் வயிற்றில் புழுக்கள் இருக்கக் கூடும்.குழந்தைகள் வெள்ளை நிறத்தில் மலம் வெளியேற்றினால் அது கல்லீரல் சார்ந்த பிரச்சனைக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.எனவே உங்கள் குழந்தை வெளியேற்றும் மலத்தின் நிறத்தில் மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.