டயட் உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் உடல் எடையை இனி ஈஸியா குறைக்க முடியும்! எப்படினு தெரிஞ்சிக்க ஆசையா?
வாய் ருசிக்காக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் அவை உடலில் தேவையற்ற கொழுப்புகளை உருவாக்கி எடையை கூட்டி விடுகிறது.ஆரம்பத்தில் ஒரு கிலோ,2 கிலோ அளவிற்கு உடல் எடை கூடினால் அவை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஆனால் உடல் எடை மீது அக்கறை செலுத்த தவறினால் நாம் நினைத்தாலும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடும்.உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்புகளும் ஏற்படத் தொடங்கிவிடும்.
உடல் பருமனால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்பட்டு பெரும் சிரமத்தில் கொண்டு சேர்த்துவிடும்.எனவே உணவில் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம்.அதேபோல் சிலருக்கு அதிகம் சாப்பிடாவிட்டாலும் உடல் எடை காரணமின்றி கூடும்.இதற்கு காரணம் அவர்கள் உடலில் ஏதேனும் நோய் பாதிப்பு இருக்கக்கூடும்.
எப்படியாக இருந்தாலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாம் சில ஆரோக்கிய விஷயங்களை கடைபிடித்தாக வேண்டும்.சிலருக்கு உணவில் கட்டுப்பாடு மேற்கொள்வது கடினமாக இருக்கும்.சிலருக்கு தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது என்பது கடினமாக இருக்கும்.இவர்களெல்லாம் தினமும் தண்ணீர் குடித்து வந்தாலே கூடி கொண்டே செல்லும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும்.
எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?
காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் 2 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது.உணவு சாப்பிடும் பொழுதே சாப்பிட்ட பின்னரோ தண்ணீர் அருந்தக் கூடாது.அதாவது உணவு உட்கொண்ட அடுத்த 45 நிமிடங்களுக்கு தண்ணீர் அருந்தக் கூடாது.
அடிக்கடி வெது வெதுப்பான நீர் அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.தொண்டை வறண்டால் தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலுக்கு எப்பொழுதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்பொழுது அவசியம் அருந்த வேண்டும்.
காலை நேரத்தில் 1/2 லிட்டர்,மத்திய நேரத்தில் 1 லிட்டர்,மாலை நேரத்தில் 1 லிட்டர் இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் அருந்தி வந்தால் உடல் எடை விரைவில் குறைந்து விடும்.