ஈஸியான முறையில் சீயக்காய் ஷாம்பு இனி வீட்டிலேயே செய்யலாம்..!

Photo of author

By Divya

ஈஸியான முறையில் சீயக்காய் ஷாம்பு இனி வீட்டிலேயே செய்யலாம்..!

இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பதால் தோல் அலர்ஜி, கண் எரிச்சல், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் கெமிக்கல் கலந்த ஷாம்புவை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வீட்டு முறையில் சீகைக்காய் ஷாம்பு தயாரித்து பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:-

1)சீகைக்காய்
2)செம்பருத்தி பூ
3)ரோஜா பூ
4)வெந்தயம்
5)கற்றாழை ஜெல்
6)பூந்தி கொட்டை
7)உப்பு
8)கடலை மாவு

செய்முறை:-

சீகைக்காய் 1/4 கப், வெந்தயம் 1/4 கப், செம்பருத்தி பூ இதழ் ஒரு கைப்பிடி அளவு, பன்னீர் ரோஜா இதழ் ஒரு கைப்படி அளவு, கடலை பருப்பு 1/4 கப் எடுத்து வெயிலில் நன்கு காயவைத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் தனி தனியாக அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது பூந்தி கொட்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த சீகைக்காய் பொடி, கடலை மாவு, செம்பருத்தி பொடி, பன்னீர் ரோஜா இதழ் பொடி சேர்த்து 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 3 டம்ளர் தண்ணீராக சுண்டி வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு அதில் 1/4 கப் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுத்து அதில் பூந்தி கொட்டை ஊற வைத்த தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு கலக்கினால் ஷாம்பு போல் நுரைத்து பொங்க ஆரம்பிக்கும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

இந்த ஷாம்புவை தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.