சாக்லேட்டை சாப்பிட தானே முடியும்! இப்படி கூட செய்யலாமா நீங்களும் செய்து பாருங்கள்!  

0
117

சாக்லேட்டை சாப்பிட தானே முடியும்! இப்படி கூட செய்யலாமா நீங்களும் செய்து பாருங்கள்!

 

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே சாக்லேட் பிடிக்கும். அதுவும் டார்க் சாக்லேட் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சாக்லேட்டை சாப்பிட மட்டுமின்றி, சரும அழகை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம் என்கின்றார்கள் மருத்துவர்கள். சாக்லேட்டுகளைக் கொண்டு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று சருமத்திற்கு பராமரிப்புக்களுக்குபயன்படுகிறது. அழகை அதிகரிக்க செய்யும்.சாக்லேட்டுகளானது நமது முகத்தில் கொலஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட உதவும். மேலும் சாக்லேட் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

 

இந்த சாக்லேட் பவுடர் ஃபேஷியல் சருமத்தின் ஈரப்பசையை மேம்படுத்துவதோடு, முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த சாக்லேட் ஃபேஷியலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம். அந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு முதலில்

ஒரு பௌலில் 2 ஸ்பூன் சாக்லேட் பவுடரை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். முகம் பளிச்சிட இது உதவுகிறது.

 

மேலும் இந்த சாக்லேட் ஃபேஸ் ஸ்கரப் சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இதனால் இந்த ஃபேஸ் ஸ்கரப்பை அடிக்கடி பயன்படுத்துவதால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும். மேலும் ஒரு பௌலில் 2 ஸ்பூன் கொக்கோ பவுடர், 1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் சிறிது பால் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு முகத்தை ஈரத்துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அழுத்தி தேய்த்துவிடாமல், மென்மையாக தேய்க்க வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சோர்வு போன்றவை நீங்கி முகம் புத்துணர்ச்சி பெறும்.

 

 

Previous articleவிக்ரம் மீது காண்டில் இருக்கும் இயக்குனர்கள்! நீங்கள் இப்படி பண்ண கூடாது!
Next articleஇறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!