இப்படி கூட பதிலடி கொடுக்கலாம்.. வேங்கைவயல் கிராம மக்களுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!!
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் இப்போது வரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு சரியான சாட்சிகள் இல்லாத காரணத்தால் இத்தனை காலமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வேங்கைவயல் கிராம மக்கள் நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பதாகைகளை வைத்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கிராம மக்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, “ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் கிராம சம்பவத்தில் 16 மாதங்களாகியும் குற்றவாளிகளை கைது செய்யாமல் திமுக அரசு கண் துடைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
வாக்களிப்பது ஜனநாயக கடமை ஆனால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அக்கிராம அறிவித்து இருப்பது வேதனை அளிக்கிறது. வேங்கைவயல் மக்கள் மாற்றத்திற்காகவாவது வாக்களிக்க முன்வரவேண்டும். தங்கள் வாக்குகளின் வலிமையை திமுக அரசுக்கு உணர்த்துவது தான் அவர்களின் உண்மையான பதிலடியாக இருக்கும்” என கூறியுள்ளார்.