உப்பை வைத்து வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்ய முடியும்..!! தீய சக்திகள் விலகும்..!!

Photo of author

By Janani

உப்பை வைத்து வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்ய முடியும்..!! தீய சக்திகள் விலகும்..!!

Janani

வாஸ்து பிரச்சனைகளை உப்பினை வைத்து சரி செய்ய, குறிப்பாக கல் உப்பினைப் பயன்படுத்தி, எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. உதாரணமாக, கல் உப்பினை மூலைகளில் வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நீங்கும், மேலும் தூய்மையான சூழல் கிடைக்கும்.

வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட கல் உப்பையும், காய்ந்த மிளகாயும் பயன்படுத்துவார்கள். அதேதான் நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்கவும் பயன்படுத்துவோம். அதற்கு கல் உப்பு, காய்ந்த மிளகாய் 4, எலுமிச்சை பழம் 1. கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கக் கூடிய ஒரு எளிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.

அடுத்ததாக ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும். பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும். மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்க வேண்டும்.

இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அப்படி மாற்றும்போது கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம். வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளையும் நீக்கும்.

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் உப்பை நிரப்பி குளியல் அறையில் வையுங்கள். இது வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கி விடும். அதோடு வளம், வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அனைத்து தீய சக்திகளையும் இது ஒழித்து விடும்.

ஒரு சிவப்பு துணியில் சிறிது உப்பினை எடுத்து சிறிய முடிச்சாக கட்டி வீட்டின் வாசலில் கட்டி வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள், தீமைகள், பொறாமை, கண் திருஷ்டி ஆகியவற்றை வீட்டிற்குள் வர விடாமல் தடுப்பதுடன் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் ஞானத்தையும் பெற்றுத் தரும். வீட்டில் மட்டுமின்றி தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்கள், வேலை செய்யும் இடம் ஆகியவற்றிலும் இதை வைக்கலாம்.

சிறிது உப்புடன் 4 அல்லது 5 கிராம்புகளை எடுத்து ஒரு கண்ணாடி பாத்திரம் அல்லது சிறிய கிண்ணத்தில் போட்டு வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இப்படி செய்வதால் வீட்டில் தடை இல்லாமல் பணம் வந்து கொண்டே இருக்கும். அதோடு வீட்டில் எப்போதும் அமைதியும், சந்தோஷமும் நிலைத்திருக்கும்.