ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் என்ற அமைப்பானது நம் எவ்வளவு கடன் பெறுகிறோம் அதனை முறையாக திரும்ப செலுத்துகிறோமா என்பதை எல்லாம் அடிப்படையாக வைத்து கொடுக்கப்படும் மதிப்பு தான் இந்த சிபில் ஸ்கோர்.
அதாவது நான் பேங்கில் லோன் எடுக்கிறோம் அல்லது ஏதேனும் ஒரு பொருளை வாங்கி EMI கட்டுகிறோம் என்றால் அதை முறையாக சரியான காலத்திற்குள் செலுத்தி விட்டோம் என்றால் நம்முடைய சிபில் ஸ்கோர் அதிக அளவில் இருக்கும். இதன் மூலம் மீண்டும் நம்மால் லோன் பெற்றுக் கொள்ள முடியும்.
பொதுவாக சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருத்தல் வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு 0 என்று மதிப்பையே சிபில் ஸ்கோர் காட்டும். இதற்கான காரணம் அவர்களுடைய கடந்த காலத்தில் அவர்கள் பெற்ற கடனாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய சிபில் ஸ்கோரை மீண்டும் உயர்த்துவதற்கு மறுபடியும் லோன் பெறுதல் அவசியம்.
ஆனால் 0 ஆக சிபில் ஸ்கோர் வைத்திருப்பார்களுக்கு பெரிய அளவில் லோன் கிடைக்காது என்றாலும் சரியாக லோனை பெற்று அதை முறையாக கட்டி வருதல் அல்லது மேற்கூறியபடி EMI மூலம் பொருட்களை எடுத்து அதனை உரிய நேரத்திற்குள் கட்டி விடுதல் பொழுது செயல்பாடுகள் சிபில் ஸ்கோரை அதிகரித்து மிகப்பெரிய லோன்களை பெறுவதற்கான வாய்ப்பாக அது அமையும். ஆனால் இதற்காக ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருத்தல் மிகவும் அவசியமான ஒன்று.
ஒரு சிலருக்கு காத்திருக்க காலம் இல்லை உடனடியாக தேவை என்றால் அவர்கள் தங்களுடன் நல்ல சிபில் ஸ்கோர் உள்ள ஒருவரை கூட்டி சென்று லோன் இருக்கு விண்ணப்பித்தால் லோன் கிடைப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம். உடனடியாக சிபில் ஸ்கோரை வைத்து லோன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை பின்பற்றலாம்.