இதிலும் கொலை செய்யலாம்! மருத்துவ ஊழியரின் செயல்!

இதிலும் கொலை செய்யலாம்! மருத்துவ ஊழியரின் செயல்!

கொப்பல் தாலுகா முத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. குஷ்டகி டவுனில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மஞ்சுநாத் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இது பற்றிய விஷயம் மஞ்சுளாவிற்கு சிறிது சிறிதாக தெரியவந்தது. அவருடனான காதலை கைவிடும்படி அவரிடம் பலமுறை கூறியுள்ளார். இது தொடர்பாக பேச்சு எடுத்தாலே, அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் மஞ்சுநாத்.

அதனைத் தொடர்ந்து நேற்று அவரை வெளியே அழைத்துச் சென்று ஊர் சுற்றிவிட்டு, ஓட்டலில் 2 பேரும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அந்த கள்ளக்காதல் விஷயம் குறித்து இரண்டு பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மஞ்சுநாத், செல்போனின் சார்ஜரை எடுத்து மஞ்சுளாவின் கழுதை இறுக்கி இருக்கிறார். இதில் மஞ்சுளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த குஷ்டகி டவுன் போலீசார் விரைந்து சென்று மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பிறகு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கள்ளக்காதலை கண்டித்ததாலும், அதற்கு இடையூறாக இருந்ததன் காரணமாகவே மஞ்சுளாவை கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரிக்கும் போதும் அவர் இதையே கூறினார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment