How to Make Kerala Style Coconut chutney : இரண்டு நிமிடத்தில் கேரளா “தேங்காய் சட்னி” செய்யலாம் வாங்க!!
நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த உணவுகளுக்கு சட்னி சிறந்த காமினேஷனாக இருந்து வருகிறது. சட்னியில் கடலை சட்னி, காரச் சட்னி, பருப்பு சட்னி, தக்காளி சட்னி என பல வகைகள் இருக்கிறது.
அதில் நம் அனைவருக்கும் பேவரைட் சட்னி என்றால் அது தேங்காய் வைத்து செய்யப்படும் சட்னி தான். இந்த சட்னியை கேரளா ஸ்டைலில் செய்தால் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில்
மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் துண்டுகள் – 8
*இஞ்சி – சிறு துண்டு
*பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
*காய்ந்த குண்டு மிளகாய் – 5
*பச்சை மிளகாய் – 2
*கருவேப்பிலை – 5 இலைகள்
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
Kerala Style Coconut chutney Making Steps:
முதலில் அரை மூடி தேங்காய் எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
பின்னர் சிறு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கிக் சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேங்காய் சேர்த்துள்ள மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
அதனோடு 2 பச்சை மிளகாய் மற்றும் 5 காய்ந்த குண்டு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். இல்லையெனில் நீங்கள் உண்ணும் காரத்திற்கேற்ப மிளகாய் சேர்த்து கொள்ளவும். இறுதியாக 5 முதல் 6 கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு சுத்து அரைக்கவும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் தேங்காய் சட்னி அதிக சுவையுடன் இருக்கும். இந்த சட்னி கேரள மக்களுக்கு பிடித்த அதே சமயம் செய்வதற்கு மிகவும் சுலபமான சட்னி ஆகும்.