பார்லர் போகாமலையே உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றலாம்!! அதற்கு இந்த ஒரு காய் தான் தேவைப்படும்!!

Photo of author

By Divya

பார்லர் போகாமலையே உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றலாம்!! அதற்கு இந்த ஒரு காய் தான் தேவைப்படும்!!

முகம் வெள்ளையாக இருந்தாலும் பொலிவு இல்லை என்றால் அழகாக இருக்காது.எனவே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட்
2)மஞ்சள் தூள்
3)முல்தானி மெட்டி
4)சந்தன பொடி

செய்முறை:-

ஒரு முழு பீட்ரூட் கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை வெயிலில் நன்கு காயவைத்து கொள்ளவும்.

பீட்ரூட் வத்தல் போல் காய்ந்து வந்ததும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதனுடன் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள்,2 தேக்கரண்டி முல்தானி மெட்டி மற்றும் 2 தேக்கரண்டி சந்தன பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இந்த பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.அதில் அரைத்த பீட்ரூட் பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்க்கவும்.பிறகு அதில் 2 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த பீட்ரூட் பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.பிறகு அரை மணி நேரம் விட்டு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வந்தால் பொலிவற்ற முகம் ஒரே மாதத்தில் பொலிவாக காட்சியளிக்க தொடங்கும்.