பத்து ரூபாய் நாணயங்களை இனி வாங்க மறுக்க முடியாது! மீறினால் தண்டனை!
கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால் தற்போது வரையிலும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி அனைத்திடங்களிலும் பரவி இருக்கின்றது. இதன் காரணமாகவே குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயமானது வாங்க மறுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்திக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் அனைத்து மாநில அரசு பேருந்துகளிலும் ஊழியர்களிடம் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குமாறு அறிவுறுத்த வேண்டும். பத்து ரூபாய் நாணயம் தொடர்பாக போஸ்டர்களை மக்களுக்கு தெரியும்படி அனைத்து இடங்களிலும் ஒட்ட வேண்டும்.
இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். அதுமட்டுமின்றி அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பத்து ரூபாய் நாணத்தை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் 10 மற்றும் 20 நாணயங்களை வாங்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.