பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

0
94

ரேஷன் கடை ஊழியர் ஒருவர் ரேஷன் கடையில் உள்ள அரிசி மூட்டைகளை பிளாக்கில் விற்றால் மட்டுமே அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை எடை போட்டு கொடுக்கக்கூடிய உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும் என்று கூறிய ஆடியோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராம பகுதி நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் திலகவதி. இவர் தொடர்ந்து ரேசன் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அதற்கு ஆதாரமாக ஆடியோ மற்றும் வீடியோக்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறு ரேஷன் பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்வதை அறிந்த மக்கள் நேரடியாக சென்று அவரிடம் கேட்கும்பொழுது, அவ்வாறு விற்பனை செய்தால்தான் எடைபோடும் ஊழியருக்கு ஊதியம் வழங்க முடியும் என தான் செய்யும் முறை குறித்து ஆடியோவுடன் ஒப்புக்கொண்டுள்ளது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இணையதள சேவை முடங்கியுள்ளதாக ரேஷன் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களை காக்க வைத்து தனி நபர் ஒருவருக்கு முட்டை- முட்டையாக இலவச அரிசியை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.

 

மேலும், எடை இயந்திரத்தில் முறைகேடு செய்து அனைத்து பொருட்களிலும் ஒரு கிலோவிற்கு 100 கிராம் எடை குறைவாக வழங்கி வருவது குறித்து கேட்டால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 100 கிராம் எடை குறைவாகவே வழங்கப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு வரும் 50 கிலோ மூட்டைகளில் 45 கிலோ மட்டுமே வழங்கப்படுவதால் எடை குறைவாகவே பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் ஒப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleபெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் மறந்தும் கூட வால்நட்டை சாப்பிட்டு விடாதீர்கள்!!
Next articleடிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் அமல்படுத்த இருக்கும் ஆதாரின் புதிய விதி!! இனி அனைத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணம்!!