எங்க படத்துக்கு டைட்டில நீங்கதான் வைக்கனும்! பிரபல இயக்குநர் பேட்டி!!

0
122
#image_title

எங்க படத்துக்கு டைட்டில நீங்கதான் வைக்கனும்! பிரபல இயக்குநர் பேட்டி!!

பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் தற்பொழுது இயக்கி வரும் திரைப்படம் ஒன்றுக்கு தலைப்பை மக்கள் தான் வைக்க வேண்டும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் சத்யராஜ் நடித்த என்னமா கண்ணு, இங்கிலிஷ்காரன், கோவை பிரதர்ஸ், மஹா நடிகன், நடிகர் பிரபுதேவா நடித்த சார்லிசாப்ளின், சார்லிசாப்ளின் 2 ஆகிய திரைப்படங்களையும் காதல் கிறுக்கன், வியாபாரி, சண்டை போன்ற இன்னும் பல திரைப்படங்களை இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.

மேலும் ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும், டிஸ்ட்ரிபியூட்டராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் எழுத்தாளராகவும் இருந்துள்ளார். பல திறமைகளை கொண்டுள்ள இயக்குநர் சக்தி சிதம்பரம் தற்பொழுது நடிகர். பிரபு தேவா அவர்கள் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றை இயக்கி வருகின்றார்.

சார்லி சாப்லின், சார்லி சாப்ளின் 2 ஆகிய திரைப்படங்களில் பிறகு நடிகர் பிரபு தேவா மற்றும் இயக்குநர் சக்தி சிதம்பரம் அவர்களின் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இயக்குநர் சக்தி சிதம்பரம் அவர்கள் இந்த திரைப்படத்தை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இயக்குநர் சக்தி சிதம்பரம் அவர்கள் திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் “தற்பொழுது நான் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் கதையை தயார் செய்ய இரண்டு வருடங்கள் ஆனது. இந்த கதையை நான் நடிகர் பிரபுதேவா அவர்களிடம் சொன்னேன். நடிகர் பிரபுதேவா அவர்கள் உடனே ஓகே சொன்னார்.

அது மட்டுமில்லாமல் மக்களே உங்களுக்கு ஒரு பெரிய கடமை இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கான தலைப்பை மக்கள் நீங்கள் தான் வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என்று அவர் கூறினார். இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா அவர்களுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டின் அவர்கள் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!!
Next articleKerala Style Recipe: கேரளா ஸ்டைல் ராகி புட்டு – செய்வது எப்படி?