UG, PG இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்!! யு.ஜி.சி யின் புதிய வழிகாட்டல்கள்!!

Photo of author

By Gayathri

இந்தியாவின் மான்சிஸ்டர் ஆன டெல்லியில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை யு. ஜி. சி வெளியிட்டுள்ளது.

இளங்கலை(UG), முதுகலை(PG) போன்ற படிப்புகளில் மாணவ சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு இரண்டு முறை “ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், ஜனவரி- பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள்” நடத்தலாம். “உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த படிப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்கல்வி நிறுவனமே முடிவு செய்யலாம்”.

உயர்கல்வி, தொழில் கல்வி, பயிற்சி, திறன் மேம்பாடு, இன்டர்ன்ஷிப் ஆகிய அனைத்தையும் ஒட்டுமொத்த பாடத்திட்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தவும், தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ‘இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைத்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர பிளஸ் டூ தேர்ச்சி’ பெற்றிருக்க வேண்டும்.

‘பிளஸ் டூ வில் அறிவியல், கணிதம், வணிகவியல் என எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து இருந்தாலும், விரும்பிய பட்டப் படிப்பில்’ சேரலாம். இதற்காக தேசிய அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் ”நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும்” என்றும் கூறியுள்ளது. ‘உயர்கல்வி நிறுவனங்களில் போதிய கல்வி மற்றும் அடிப்படை வசதி இருந்தால் இளங்கலை, முதுகலை படிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம்’ என அதிரடியான திட்டங்களை அறிவுத்துள்ளனர்.

” ஒரே நேரத்தில் இளங்கலையில் இரண்டு படிப்புகளையும், முதுகலையில் இரண்டு படிப்புகளையும் படிக்கலாம்”. ‘மாணவர்களின் குறைந்தபட்ச வருகை பதிவு தேவையை தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் உயர்கல்வி நிறுவனங்கள் முடிவு செய்யலாம்’. இளங்கலை பட்டப் படிப்பின் காலம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாகவும், முதுகலை படிப்பின் காலம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக இருக்கும்.

நான்கு ஆண்டுகால இளங்கலை படிப்பை முடிப்பவர்கள் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரலாம். இந்த திட்டத்தில் நிறைகள் பல இருந்தாலும் “நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும்” எனவும் கல்வியாளர்கள் அச்சம் கொள்கின்றனர் . “கல்வி திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வரும்போது, அனைத்து மாநிலங்களிடமும் கருத்தை கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.