ஒரு வெற்றிலையை வைத்து உடலில் இம்யூனிட்டி பவரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்!!

Photo of author

By Divya

ஒரு வெற்றிலையை வைத்து உடலில் இம்யூனிட்டி பவரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்!!

Divya

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் எளிதில் நோய் தொற்றுக்கள் அண்டிவிடும்.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிலை கஷாயம் செய்து குடிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு – இரண்டு
2)மிளகு – கால் தேக்கரண்டி
3)சுக்கு – ஒரு துண்டு
4)வெற்றிலை – ஒன்று
5)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் இரண்டு கிராம்பு,கால் தேக்கரண்டி மிளகை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் போட்டு சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.இந்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

4.பிறகு நறுக்கி வைத்துள்ள வெற்றிலையை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு இடித்த கிராம்பு,மிளகு மற்றும் சுக்கு கலவையை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

5.இந்த வெற்றிலை கஷாயத்தை இளஞ்சூட்டு பக்குவத்தில் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.வெற்றிலை ஒன்றை காம்பு நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த வெற்றிலை சாறை கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

2.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக கலந்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.