ஆப்பிளின் மீது ஒட்டப் பட்டிருக்கும் sticker-ல் இருந்து ஆப்பிளின் தரத்தை கண்டறியலாம்!!

Photo of author

By Divya

ஆப்பிளின் மீது ஒட்டப் பட்டிருக்கும் sticker-ல் இருந்து ஆப்பிளின் தரத்தை கண்டறியலாம்!!

Divya

அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் காய்கறி,பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது என்பது குறித்த சந்தேகம் உங்களுக்கு எழும்.குறிப்பாக ஆரஞ்சு,ஆப்பிள் பொன்னிற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.பழம் நல்ல நிலையில் இருக்கின்றதா என்று பார்த்து வாங்கும் நாம் பழத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை கவனிக்க தவறுகின்றோம்.

அதேபோல் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அது தரமான பழம் என்று அனைவரும் நினைக்கின்றனர்.நாம் மார்க்கெட்டில் பழங்கள் வாங்கும் முன் நிச்சயம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.பழங்களில் ஸ்டிக்கர் இருக்கிறதா என்று மட்டும் பார்க்காமல் ஸ்டிக்கரில் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

நாம் வாங்கும் பழங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் பழம் எவ்வளவு புதியவை என்று பார்த்து வாங்க உதவியாக இருக்கிறது.உள்ளூர் சந்தையில் விற்கப்படும் பழங்களில் இந்த ஸ்டிக்கர் பார்ப்பது அரிது.ஆனால் பல் பொருள் அங்காடியில் உள்ள பெரும்பாலான பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

பழத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் அவை மரபணு மாற்றப்பட்டதா? இயற்கை சூழலில் விளைந்ததா என்று அறிந்து கொள்ள முடியும்.அதேபோல் பூச்சிக் கொல்லி போன்ற இரசாயனங்கள் தெளிக்கப்பட்ட பழமா? அலல்து ஆர்கானிக் பழமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.ஆப்பிள் போன்ற பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை பார்த்தால் அதில் எத்தனை இலக்க எண் இருக்கிறது என்பதை கவனியுங்கள்.

4 இலக்க எண் இருந்தால் பழம் கெமிக்கல் இல்லாமல் சாதாரணமாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.நீங்கள் வாங்கும் பழத்தில் ஐந்து இலக்க எண் இருந்து அதன் முதல் எண் 8 என்று தொடங்கினால் அது மரபணு மாற்றப்பட்டது என்று அர்த்தம்.

இதுவே ஐந்து இலக்கத்தில் 9 என்ற எண் முதலில் தொடங்கினால் அது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழம் என்று அர்த்தம்.இனி ஆப்பிள் மட்டுமின்றி ஆரஞ்சு,வாழை போன்ற எந்த பழங்கள் வாங்குவதற்கு முன்பும் அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை கவனித்து பார்த்து வாங்குவது நல்லது.