Tamilnadu Gov: தமிழக அரசானது மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு நலத்திட்டங்களை டிஜிட்டல் முறையில் கொண்டு வந்துள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை எனத் தொடங்கி தமிழக அரசிடம் விண்ணப்பிக்க வரும் கோரிக்கைகள் என அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். அந்த வரிசையில் நிலத்தை அளக்க வேண்டுமென்றால் நேரடியாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கட்டணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்பு நிலமானது சர்வேயர் மூலம் அளக்கப்பட்டு இது ரீதியான ஆவணங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு மக்கள் தொடர்ந்து அலுவலகத்திற்கு செல்வதும் சர்வேயர் வராததும் பல புகார்கள் தொடர்ந்து வந்தது. மேற்கொண்டு மக்கள் எளிதில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற வகையில் இணைய வழி மூலம் நில அளவினை அளக்க விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தது. தற்போது இது ரீதியான அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார். இனி தூத்துக்குடி மாவட்டம் மக்கள் நில அளவை எடுப்பதற்காக அந்தந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நேரடியாக இணையத்தில் பதிவிட்டு வங்கிகளுக்கு சென்று பணத்தை கட்டிக் கொள்ளலாம்.
இது ரீதியாக அதிகாரப்பூர்வ தளமான, httsamilnilam.tn.gw.inxiyizen என்ற இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் கட்டணங்கள் செலுத்த பொதுமக்கள் நேரடியாகவே வங்கி கிக்கு சென்று செலுத்திக் கொள்ளலாம். இதனால் இடைத்தரகர்கள் பஞ்சாயத்து இருக்காது. இல்லையென்றால் ஒவ்வொரு ஊரில் உள்ள ஈ சேவை மையத்தை நாடியும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு விண்ணப்பித்தவர்கள் தாங்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணிற்கு நில அளவு எப்பொழுது எடுக்கப்படும் என்பது குறித்தான முழு விவரமும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அந்த தேதியில் சர்வேயர்கள் நிலத்தை அளந்த பிறகு இது ரீதியான ஆவணங்களை அவர்களுடைய ஐடியில் பதிவேற்றம் செய்வர். பின்பு பொதுமக்கள் தங்கள் சர்வேயர் எண் உள்ளிட்டவற்றை கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.