கை கால் விரல்களில் வந்த நகசுத்தியை இந்த பொருட்களை வைத்து சரிசெய்யலாம்!!

Photo of author

By Gayathri

கை கால் விரல்களில் வந்த நகசுத்தியை இந்த பொருட்களை வைத்து சரிசெய்யலாம்!!

Gayathri

Updated on:

you-can-use-these-products-to-fix-the-nails-on-your-fingers-and-toes

நம் விரல் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால் பூஞ்சை பாக்டீரியா போன்றவை தொற்றிக் கொண்டு நாகசுத்தியை உண்டாக்கிவிடும்.இது நகத்தின் நிறத்தை மாற்றுவதோடு அதிக வலியை ஏற்படுத்துகிறது.நகசுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருதாணி + மஞ்சள் தூள்

ஒரு கைப்பிடி மருதாணி இலையை விழுது போல் அரைத்து மஞ்சள் கலந்து கை மற்றும் கால் விரல் நகங்களுக்கு பூசினால் நகசுத்தி குணமாகிவிடும்.

எலுமிச்சம் பழம்

நகசுத்தியை குணப்படுத்தும் ஆற்றல் எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.நன்கு கனிந்த எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து அதன் நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளவும்,பிறகு நகசுத்தி உள்ள விரலில் நுழைக்கவும்.

தினம் ஒரு எலுமிச்சம் பழம் என்று மூன்று தினங்களுக்கு இவ்வாறு செய்தால் நகசுத்தி குணமாகிவிடும்.

விக்ஸ்

நகசுத்தி உள்ள விரலை வெது வெதுப்பான நீரில் கழுவிய பிறகு பாதிக்கப்பட்ட இடத்தில் விக்ஸ் வேப்பரப் தடவவும்.இவ்வாறு செய்தால் நகசுத்தி குணமாகிவிடும்.

லெமன் கிராஸ் எண்ணெய்

நாட்டு மருந்து கடையில் லெமன் எண்ணெய் கிடைக்கும்.ஒரு சிறிய பாட்டில் வாங்கிக் கொள்ளவும்.இந்த எண்ணெயை நகசுத்தி மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

வேப்ப எண்ணெய்

நகசுத்தி மீது வேப்ப எண்ணெய் அப்ளை செய்து அப்ளை செய்து வந்தால் பாக்டீரியா,கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.

தேங்காய் எண்ணெய்

நகசுத்தி வந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.அதேபோல் பூண்டு எண்ணெய்,மஞ்சள் எண்ணெய் போன்றவையும் நகசுத்தியை குணமாக்க உதவும்.

சின்ன வெங்காயம்

கை,கால் விரல்களில் உள்ள நகசுத்தி மீது சின்ன வெங்காய சாறை தடவினால் சில தினங்களில் அவை குணமாகிவிடும்.

வசம்பு தூள் + சுக்குப்பொடி

கிண்ணம் ஒன்றில் கால் தேக்கரண்டி வசம்புத் தூள்,கால் தேக்கரண்டி சுக்குப்பொடி,சிறிதளவு மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குழைத்து நகசுத்தி மீது பூசி வர அவை சீக்கிரம் குணமாகிவிடும்.