ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. போட்ட பிளான் எல்லாம் வீணாப்போச்சு! முன்னாள் அமைச்சருக்கு வந்த சோதனை!

Photo of author

By Rupa

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. போட்ட பிளான் எல்லாம் வீணாப்போச்சு! முன்னாள் அமைச்சருக்கு வந்த சோதனை!

முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடிக்கும் மேல் பணம் வாங்கியுள்ளார். அவர் பணம் வாங்கிவிட்டு வேலை வாங்கி தராததால் இவர் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கே.டி ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்பு இவருக்கு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையில் இவர் வழக்கு பதிவு செய்துள்ள காவல் நிலையத்தை தாண்டி வேறு எங்கும் பயணிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

அதனையடுத்து மீண்டும் இந்த வழக்கானது செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்பொழுதும் தற்பொழுது வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை நான்கு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி மேலும் 4 வாரங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலையத்தை தாண்டி வேறெங்கும் செல்லக்கூடாது என்பதை தகர்த்தி தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யலாம் என்று கூறி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை நான்கு வாரங்கள் கழித்து விசாரிப்பதாக ஒத்தி வைத்தனர்.தற்பொழுது நான்கு வாரங்கள் கடந்த நிலையில் மீண்டும் ஒன்றாம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நிபந்தனைகள் அற்ற ஜாமின் வழங்குமாறு கே டி ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு அளித்திருந்தனர். மேலும் ராஜேந்திர பாலாஜி எதிர்தரப்பாக தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் அமித் ஆஜரானார்.

அவர், கே டி ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதை ரத்து செய்யும்படி கூறினார். நீதிபதி இருதரப்பினர் கூறியதையும் கேட்டு வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. நீதிபதி அவர்கள் கே.டி ராஜேந்திர பாலாஜி கேட்ட நிபந்தனைகள் அற்ற ஜாமின் மனுவை ரத்து செய்தது. மேலும் காவல்துறைக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.