உங்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை இல்லை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

உங்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை இல்லை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் கடந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் தரமற்றதாகவும்,சுகாதாரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருக்கு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் இந்த ஆண்டு அதுபோன்ற தவறு நடக்காத வண்ணம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் ரூ 1000 பணம் மற்றும் பச்சரிசு மற்றும் சர்க்கரை வழங்கலாம் என முடிவு செய்யபட்டது.அதனை தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது.அவர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க உத்தரவிட்டது.அதனை தொடர்ந்து கடந்த தினக்களில் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற டோக்கன் விநியோகம் செய்யபட்டது.

அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்றுடன் முடிவடையும் நிலையில் பொங்கல் டோக்கன் பெறாதவர்கள் மற்றும் அதில் விடுபட்டவர்கள் என அனைவரும் அவரவர்களின் ரேஷன் கடைக்கு நாளை  நேரடியாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுகொல்லாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பொங்கல் பரிசினை பெற ரேஷன் கடைகளுக்கு மக்கள் வர இருபதினால் நாளை ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே மாதத்தின் இரண்டாவது வெள்ளிகிழமை விடுமுறை அளிக்கபடுவது வழக்கம் தான்.ஆனால் பொங்கல் பரிசு வழங்கப்படும் பணி நடைபெறுவதினால் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு பொங்கல் பரிசினை பெறாதவர்கள் நாளை சென்று பெற்று கொள்ள  வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகின்றது.