உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!…

Photo of author

By Parthipan K

உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!…

Parthipan K

You don't know how to read, the father killed his seven-year-old son by kicking him!

உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!…

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஆஷா. இவரது மகன் சுக்ரீத். சிறுவனின் வயது ஏழு.இந்த சிறுவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உடன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தன் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர். ஆசாத் தனது மகனுடன் தொட்டாநாகராவில் உள்ள அவரது தந்தை வீட்டில் வசித்து வந்தார். பின்பு ஆஷாவுக்கும் அதே பகுதியில் உள்ளவருக்கும் அதிகமாக பழக்கம் ஏற்பட்டது.

மூன்று மாதத்திற்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அதே கிராமத்தில் வசித்து வந்தார்கள். இந்நிலையில் சிறுவன் சுற்றத்திற்கு உமேஷ் வீட்டு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது சிறுவன் உமேஷ் சரியாக வீட்டுப்பாடம் எழுதததால் ஆத்திரமடைந்த உமேஷ் சிறுவனை அடித்து உதைத்து கீழே தள்ளி உள்ளார்.

இதனால் பலத்த காயம் அடைந்த அந்த சிறுவன் உயிருக்கு போராடினான். மகனின் சத்தம் கேட்டு ஓடி வந்த ஆஷா உடனே அவனை சக்லேஸ்புரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லும்படி கூறி இருந்தார்கள்.

இதனையடுத்து பெங்களூருக்கு கொண்டு செல்வதற்குள் சிறுவன் இறந்து விட்டான். இது குறித்து ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  உமேஷ் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க தெரியாத சிறுவனை சொல்லி கொடுப்பதுதான் தந்தையின் முதல் வேலை.இப்படி கொலைவெறி தாக்குதல் செய்ய கூடாது. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.