இரத்த அழுத்த பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நமது உடலில் இரத்த அழுத்தம் நடுநிலையாக இருக்க வேண்டியது முக்கியம்.இதற்கு மாறாக இரத்த அழுத்தத்தின் அளவு அளவு அதிகரித்தால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
நமது இரத்த நாள சுவரில் ஏற்படும் அழுத்தத்தைதான் உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கின்றோம்.இதை ஹைப்பர் டென்ஷன் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.இரத்த அழுத்தத்தில் சிஸ்டாலிக் மற்றும் டையஸ்டாலிக் என்ற இருவகை இரத்த அழுத்தம் இருக்கிறது.
இதில் சிஸ்டாலிக் 140 mmHg மற்றும் டையஸ்டாலிக் 90 mmHg ஆக இருந்தால் அவை சரியான இரத்த அழுத்தம் என்று அர்த்தம்.இந்த அளவைவிட அதிகரித்தால் அவை உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படும்.இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம் உடல் பருமன்தான்.
இந்த உயர் இரத்த அழுத்த பாதிப்பு உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாலும் ஏற்படுகிறது.அதேபோல் மன அழுத்தப் பிரச்சனை,தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.
உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளுதல்,உப்பு நிறைந்த தின்பண்டங்களை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மாத்திரை மட்டும்தான் தீர்வு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மாத்திரை இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.அதாவது தினமும் உடற்பயிற்சி,யோகா,தியானம் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.புகைப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.மது பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.நன்றாக உறங்கினால் மன அழுத்தம் ஏற்படுவது கட்டுப்படும்.உங்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சில யோகா பயிற்சிகளை செய்து வரலாம்.
காலை நேரத்தில் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி அமர வேண்டும்.பிறகு இரண்டு கைகளையும் மடியில் ஒன்றன் மீது ஒன்றன் மேல் வைத்து கண்களை மூடி நன்றாக மூச்சு இழுத்துவிட வேண்டும்.இப்படி தினமும் காலையில் 10 நிமிடங்கள் செய்தால் உயர் இரத்த அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.