ஒருவருக்கு ஒற்றை தலைவலி ஆனது தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். குறிப்பாக தலை என தொடங்கி கண் தாடை என ஒரு பக்கம் முழுவதும் வலி இருந்து கொண்டே இருக்கும். இது ஒருவித நரம்பியல் பிரச்சனை எனக் கூறினாலும் பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது.
இந்த ஒற்றைத் தலைவலி ஆனது பெரும்பாலும் பெண்களை அதிக அளவு பாதிக்க கூடியது என கூறுகின்றனர். மீண்டும் ஒற்றை தலைவலி வராமல் இருக்க தினசரி அதிக அளவு தண்ணீர் எடுப்பதோடு, படபடப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி அதிக அளவு கோபம் கொள்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலியானது இருந்து கொண்டே இருக்கும். தங்களை சமநிலையில் வைத்துக்கொள்ள எப்பொழுதும் மயில வேண்டும். மருந்து மாத்திரை இன்றி இதனை எளிமையான சித்த வைத்தியம் முறையில் சரி செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அகில் கட்டை – 300 கிராம்
பசும்பால் – 1 லிட்டர்
நல்லெண்ணெய் – 1 லிட்டர்
அதிமதுர தூள் – 30 கிராம்
தான்றிக்காய் தூள் – 30 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் வைக்க வேண்டும்.
அதில் அகில் கட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட வேண்டும்.
பின்பு அதனை ஒரு லிட்டர் தண்ணீர் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின்பு இதில் பசும்பால் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும்.
இதனுடன் தான்றிக்காய் அதிமதுரம் சேர்த்து தைலம் பதம் வரும் வரை நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் கழித்து இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இதனை பயன்படுத்தும் பட்சத்தில் நுரையீரல் என தொடங்கி ஆஸ்துமா ஒற்றைத் தலைவலி என அனைத்தும் குணமாகும்.