இனி கடைகளில் காசு போட்டு வாங்க தேவையில்லை! வீட்டிலேயே செய்யலாம் ரூம் ப்ரஷனர்!!

Photo of author

By Vijay

இனி கடைகளில் காசு போட்டு வாங்க தேவையில்லை! வீட்டிலேயே செய்யலாம் ரூம் ப்ரஷனர்!!

கமகமக்கும் முகப் பவுடர் கொண்டு எளிதாக வீட்டில் ரூம் ப்ரஷ்னர் செய்யும் வழிமுறைகள்:
வீட்டினை சுத்தமாக வைத்துக் கொண்டால் நமது உடல் நலத்துக்கு மட்டும் இல்லை. நம் மனநலத்துக்கும் நல்லது.வீட்டினை நறுமணமாக வைத்துக் கொள்வது வீட்டிற்கு மட்டும் இல்லை நமக்கும் கூட புத்துணர்ச்சி தரும்.
வீட்டை திறந்ததும் வாசம் வீசினால் சோர்வு நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும் ‌. அந்த வகையில் வீட்டினை நறுமணமாக வைக்க நிறைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டியதாக உள்ளது. எளிய முறையில் முகத்திற்கு பூசும் பவுடர் கொண்டு வீட்டை கமகம என்று வாசமாக மாற்றும் முறையை பார்க்கலாம்.
வாசனைக்கு பயன்படுத்தும் நாப்தலீன் உருண்டைகளில் அதிக அளவில் இரசாயன பொருட்கள் கலந்து இருக்கும்.
அதற்கு மாற்றாக எளிய முறை வாசனை உருண்டை இதோ;

தேவையான பொருட்கள்:
1.முகத்திற்கு பூசும் பவுடர் – 50 கிராம்
2. பேக்கிங் சோடா -50 கிராம்
3.கம்போர்ட்- 1 பாக்கெட்
4. சிறிதளவு கம்
இவை அனைத்தையும் சேர்த்து பூரிக்கு மாவு பிசைவது போல பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். கம் சேர்க்கவில்லை என்றால் மாவு உருண்டை பிடிக்க வராது.
இளகி விடும். இந்த உருண்டைகளை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து எடுக்கவும். பின்னர் இலேசான துணியில் கட்டி வைத்து பாத்ரூம், பூஜை ரூம், கிச்சன், ஹால் என நமக்கு தேவையான இடங்களில் வைத்துக் கொண்டால் வீடு முழுவதும் நல்ல வாசனையாக இருக்கும். கிச்சனில் மீன், மட்டன் போன்ற நான்வெஜ் சமைத்தால் கூட அந்த வாசத்தையும் அடக்கி விடும்.