தங்க நகைகள் குவிய நீங்கள் இந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்..!

Photo of author

By Divya

தங்க நகைகள் குவிய நீங்கள் இந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்..!

தங்க நகைகள் மீது ஆசைக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூக்குத்தி முதல் கால் கொலுசு வரை பல வித டிசைன்களில் விற்கப்படும் தங்கத்தை வாங்குவது பலரின் கனவாகவே இருக்கின்றது.

ஆனால் தங்கம் விலையேற்றத்தை பார்க்கும் பொழுது நம் தங்கம் வாங்கும் கனவு.. கனவாகவே போய்விடும் போலும்.

சிலருக்கு தங்க நகைகள் வீட்டில் தங்காமல் எதிர்பாராத செலவிற்கு அடகு கடைக்கு சென்று விடும். சிலருக்கு பணம் இல்லாமல் தங்கம் வாங்க முடியாமல் போய்விடும்…

இவ்வாறு தங்கம் வாங்க முடியாமலும்… சேராமலும் போக பல காரணங்கள் இருக்கின்றது. நம்மிடம் சேர வீட்டில் ஒரு எளிய பரிகாரம் செய்ய வேண்டும்.

அதற்கு முதலில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து பச்சரிசி மாவில் வண்ணக் கோலமிட வேண்டும்.

அடுத்து அந்த கோலத்தின் நடுவில் ஒரு மண் அகல் விளக்கு வைக்கவும். இந்த விளக்கில் தங்கத்தை வாரி வழங்கும் குபேரருக்கு உகந்த இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு வீட்டில் தடை இன்றி தங்கம் சேர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு ஒரு மாதம் கோலமிட்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் தங்கம் வாங்கும் வழி பிறக்கும்.