பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.உடல் மற்றும் மனதளவில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய செயல்களில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் நடைபெறும்.
நம் அம்மா,பாட்டி காலத்தில் சுகப் பிரசவங்கள் மூலமே அதிக குழந்தைகள் பெற்றெக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது சுகப்பிரசவங்கள் ஏற்படுவது அரிதான விஷயமாக இருக்கின்றது.இன்றைய இளம் தலைமுறை பெண்களால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது சவாலான விஷயமாக இருக்கிறது.
தற்பொழுது நவீன மருத்துவ சிகிச்சைகள் அதிகரித்துவிட்டது.முன்பைப்போல் கஷ்ட்டப்பட்டு சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள இன்றைய காலத்து அம்மாக்கள் விரும்புவதில்லை.சிசேரியன் மூலம் கஷ்டப்படாமல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
சில அப்பத்தான நேரங்களில் தாய் மற்றும் சிசுவின் உயிரை காப்பாற்ற சிசேரியன் செய்யப்படுகிறது.ஒருமுறை சிசேரியன் மூலம் குழந்தை பெற்றால் அதன் பிறகு சுகப் பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.முதல் குழந்தை சிசேரியன் மூலம் பெற்றால் இரண்டாவது குழந்தையும் சிசேரியனில் தான் பெற்றெடுக்க முடியும்.ஒரு பெண் அதிகபட்சம் 4 அல்லது 5 முறை சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் 3 சிசேரியன்தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று சிசேரியன் செய்து குழந்தை பெற்ற பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.அதற்கு மேல் சிசேரியன் செய்து குழந்தை பெற்றால் அது தாயின் உடல் நலத்தில் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடும்.