அமெரிக்கா தொடுத்திருக்கக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலை ஆனது சமீப நாட்களாகவே எதிர்பாராத அளவு உச்சத்தை சந்தித்து வருகிறது. மேலும் உச்சத்தை சந்திக்க கூடிய புதிய முடிவு ஒன்றினை பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி எடுத்திருக்கிறது.
ஃபெடரல் ஓப்பன் மார்க்கெட் கமிட்டி எடுத்திருக்கக் கூடிய புதிய முடிவானது தங்களுடைய நிதி விகித இலக்கை 4.25% லிருந்து 4.50% என அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் வட்டி விகிதமானது கூடவோ அல்லது குறையவோ செய்யாது என்றும் அதற்கு மாறாக அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய பண மதிப்பும் வீழ்ச்சியை சந்தித்திருக்கக்கூடிய நிலையில் இப்பொழுது அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்க தொடங்கி இருப்பது வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கான அறிகுறி என்றும் தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனடியாக தங்கங்களை பெற்று வைப்பது நிலையான பணமதிப்பை பெறுவதற்கான வழிவகையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் 28 கிராம் தங்கம் அதாவது ஒரு அவுன்ஸ் எனப்படும் மூன்றரை பவுன் தங்கம் அவுன்ஸ் முறையில் அளக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால், அமெரிக்காவில் ஸ்பார்ட் தங்கம் ஒரு அவுன்ஸ்க்கு $3053.39 ஆக விலை உயர்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் இதன் மதிப்பானது $3199.60 மாற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.