உலர் விதைகள்,உலர் பழங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க நீங்கள் உலர் உணவுப் பொருட்களை நாள்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உலர் பழங்களில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.உலர் பழங்களில் பேரிச்சை அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த பொருளாகும்.பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
பேரிச்சை ஊட்டச்சத்துக்கள்:-
**கால்சியம் **பொட்டாசியம் **மெக்னீசியம் **இரும்பு **வைட்டமின் ஏ **நார்ச்சத்து **காப்பர் **வைட்டமின் பி6 **மாங்கனீசு
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
1)நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்ய பேரிச்சம் பழத்தை உட்கொள்ளலாம்.தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.
2)இதய ஆரோக்கியம் மேம்பட பேரிச்சம் பழத்தை உட்கொள்ளலாம்.இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பேரிச்சம் பழத்தை உட்கொள்ள வேண்டும்.
3)கண் பார்வை சம்மந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.
4)செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் பேரிச்சம் பழத்தை உட்கொள்வது நல்லது.தினமும் ஒரு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
5)பேரிச்சம் பழம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
6)மூளையின் செயல்பாடு அதிகரிக்க தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம்.உடலுக்கு வலிமை கிடைக்க பேரிச்சம் பழம் உட்கொள்ளலாம்.
7)பேரீச்சையில் இருக்கின்ற இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
8)பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் போட்டு காய்ச்சி பருகினால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.