நம் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் உலர் பழங்கள் மற்றும் உலர் விதைகளை எப்படி எப்படி சாப்பிட வேண்டுமென்று நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.உலர் பொருட்களின் நன்மைகள் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அதை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
உலர் திராட்சை,பாதாம்,அத்தி,முந்திரி போன்ற பொருட்களை ஊறவைத்தால் சாப்பிடும் பொழுது எளிதில் செரிமானமாகும்.உலர் பொருட்களை ஊறவைக்க காரணம் அதில் இருக்கின்ற பைடிக் அமிலம் குறைய வேண்டும் என்பதற்காகத் தான்.
உலர் விதை மற்றும் பழங்களில் வைட்டமின் ஈ,மெக்னீசியம்,புரதம்,கால்சியம்,வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும்.
எந்தெந்த உலர் விதை மற்றும் உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிட வேண்டும்?
1)பாதாம் பருப்பு
2)முந்திரி
3)வால்நட்
4)உலர் திராட்சை
இந்த பொருட்களை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.உலர் விதைகளில் அழுக்கு,பாக்டீரியாக்கள் நிறைந்து இருப்பதால் அதை ஊறவைக்கும் பொழுது அவை நீங்கிவிடும்.அதேபோல் ஊறவைத்த உலர் விதை மற்றும் உலர் பழங்களை தண்ணீரில் அலசிவிட்டு சாப்பிட்டால் அழுக்கு கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
உலர் விதைகளை ஊறவைத்தாலும் அதை ஒருமுறை தண்ணீரில் அலசிவிட்டு சாப்பிடுவதுதான் நல்லது.பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும்.
உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் குணமாக உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடலாம்.