CRIME: 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து புதுச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் கைது.
சென்னை அசோக் நகர் பகுதியில் பொது தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு டியூசன் ஒன்றை ஆசிரியர் ஒருவர் நடித்த வந்து இருக்கிறார். இந்த நிலையில் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத 15 வயதுடைய மாணவர் படிப்பதற்காக டியூசன் வந்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி டியூசனுக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை.
எனவே அச்சமடைந்த மாணவனின் பெற்றோர் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். பெற்றோர்களின் புகாரின் பெயரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணை அடிப்படையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. அதாவது, ஆசிரியரின் தங்கையான 23 வயது இளம் பெண் முன்னதாக டியூசனுக்கு வந்த மாணவன் (15) இருவரும் காதலித்து வந்ததாகவும், இரு வீட்டுக்கு இவர்களது காதல் தெரியவரவே 15 நாட்களுக்கு முன் இரு வீட்டாரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ஆசிரியையின் 23 வயதான தங்கையும், பத்தாம் வகுப்பு மாணவன் மற்றும் ராகுல் என்ற இளைஞர் ஆகிய மூவர் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, புதுச்சேரிக்கு விரைந்த சென்னை காவல்துறையினர் டியூசன் ஆசிரியை தங்கை மற்றும் ராகுல் என்ற இளைஞர், பத்தாம் வகுப்பு மாணவன் ஆகியோரை சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.
மேலும், அச் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் அனுப்பி வைத்தார்கள். பத்தாம் வகுப்பு மாணவனை காதலித்து புதுவைக்கு அழைத்து சென்ற டியூசன் ஆசிரியர் தங்கை மற்றும் ராகுல் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது காவல்துறை.